2.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2026 தேர்தல் பணியில் திமுக மும்முரம்: திமுக நிர்வாகிகளுடன் தலைவர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் உரையாடல்.
* பீகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியது நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி; டபுள் என்ஜின் சர்க்காரை டெல்லி இயக்குகிறது, பிரியங்கா சாடல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளா வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று (1.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
* கன்னட மொழியை அழித்து ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசு, முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வீட்டு வாசலில் ரேஷன்: தகுதி வயதை தமிழ்நாடு அரசு 70 இலிருந்து 65 வயதாகக் குறைக்கிறது; நவம்பர் முதல், இரண்டாவது வாரத்திற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
– குடந்தை கருணா
