சென்னை, நவ. 1– சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 93,27,746 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணி களும், ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகளும், மேமாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில்1,03,78,835 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகளும், செப்டம்பர் 1,01,46,769 மாதத்தில் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 17.10.2025 அன்று 4,02,010 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, அக்டோபர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்கஅட்டை) பயன்படுத்தி 47,59,171 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 77,236 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 44,91,339 பயணிகள் (Single journey Paper QR /Token 19,45,259; Online QR – 1,15,825; Static QR 2,38,745; Whatsapp – 5,25,359; Paytm 3,56,234; ONDC – 8,75,731; PhonePe – 3,06,705; CMRL Mobile App 62,872; Chennai One App – 64,609) பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
