கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.11.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதா? இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகாரில் இருந்து தமிழ்நாடு ராஜ்பவனில் வாழும் ஒருவர் மட்டுமே மிகவும் சிரமப்படுவதாக கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கிண்டல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆர்.எஸ்.எஸ்-அய் தடை செய்ய வேண்டும்; பெரும்பாலான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அவர்களால்தான் ஏற்படுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திறன் மாணவர்களில் 40 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் கற்றல் இலக்குகளை எட்டினர்: திரான் முன்முயற்சியின் கீழ் ஜூலை முதல் இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலையீடுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட இந்த மதிப்பீட்டில், 7.46 லட்சம் மாணவர்களில் 2.98 லட்சம் (40 சதவீதம்) பேர் அளவுகோல்களை எட்டினர்.

தி இந்து:

* இந்திய கூட்டணிக்காக அகிலேஷ் பிரச்சாரம்: சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வேட்பாளர்களுக்காக, குறிப்பாக போஜ்புரி நடிகரும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளருமான கேசரி லாலுக்காக பிரச்சாரம் செய்வார்.

* ‘மாற்றம் நிச்சயம், பீகாரில் புதிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி மக்கள் பேசுகிறார்கள்: கல்வி, நீர்ப்பாசனம், மருத்துவம் மற்றும் வேலைகளை முன்னுரிமைப்படுத்துபவர்கள் மாநிலத்தை ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புவதால், மகாகட்பந்தன் வெற்றி பெறும் என்று ஆர்ஜேடி தலைவரும் எதிர்க்கட்சி கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி நம்பிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகார் அரசு, முதன் மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் பயனாளிகளுக்கு ரூ.10,000 நேரடி பணப் பரிமாற்றம் மூலம் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆர்.ஜே.டியின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா கடிதம்

* பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தேர்தல் அறிக்கையை வெளியிட்டது குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆளும் கூட்டணி தனது பத்திரிகையாளர் சந்திப்பை “வெறும் 26 வினாடிகளில்” முடித்துவிட்டதாக காங்கிரஸ் கேலி.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *