திருவெறும்பூர், நவ. 1- திருவெறும்பூரில் நடைபெறும் பெரியார் பேசுகிறார் 13 ஆவது நிகழ்ச்சி, 26.10.2025 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ப.கவு.யாழினி தலைமை வகித்தார். மா.ச.நிரல்யா முன்னிலை ஏற்க, பு.வி.கியூபா வரவேற்புரை வழங் கினார்.
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – ஓர் அனுபவம்” எனும் தலைப்பில் பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழக) மாணவர் அ.க. யாழினி சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டின் ஒருநாள் நிகழ்ச்சிகளை முழுமையாகக் கவனித்து, அழகாக எடுத்துரைத்தார். மாநாட்டிற்கு வராதவர்கள் கூட, அம்மாநாட்டில் பங்கேற்றது போன்ற உணர்வை, அவரது பேச்சு ஏற்படுத்தியது.
நிறைவாக அ.தமிழ்க்கவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மேடை இருந்தவர்கள் அனைவரும் பெண் மாணவத் தோழர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
நிகழ்வில் க.அ.தமிழர சன், க.அம்பிகா, க.புனிதா, ம.பி.அனுராதா, இரா.தமிழ்ச்சுடர், அ.சிவா னந்தம், சி.பஞ்சலிங்கம், சவு.சந்திரன், ஆறு.இராஜா ராமன், ஆ.பாண்டிக்குமார், கரு.புனிதவதி, ஆ.அசோக் குமார், ஆ.அன்புலதா, ஆர்.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
