திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி அவர்களுக்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பாக “கருஞ்சட்டை விருது” கடந்த 30.08.2025 சனிக்கிழமை அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இரா.காசி அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்தார். உடன் வாசுகி இசைச்செல்வன், ச.இராசேந்திரன், இரா.வேல்முருகன், ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன், இராசசேகர். (30.10.2025 திருநெல்வேலி).

‘நீட்’டை எதிர்த்து கழகத்தின் சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பரப்புரையில் திருநெல்வேலியிலிருந்து பங்கேற்ற தி.மு.க. தோழர் திருக்கரங்குடி நகர செயலாளர் கசமுத்து அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் மாவட்ட திமுக செயலாளர் கிரகாம்பெல்.
