அந்நாள் – இந்நாள் (1.11.1956)

மொழி வழி மாநில உருவாக்க நாள்

இந்தியா விடுதலை அடைந்த பிறகும், அதற்கு முன் ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக அமைத்திருந்த, பல மொழிகள் பேசும் மக்களை உள்ளடக்கிய மாகாணங்கள் (Provinces) தொடர்ந்தன. இந்த மாகாணங்களை மொழி அடிப்படையில் பிரித்து, ஒரு மொழி பேசும் மக்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளுக்கான தனி மாநிலங்களை உருவாக்க வேண் டும் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே வலுப்பெற்றது.

நிர்வாகச் சிக்கல்: பம்பாய், சென்னை போன்ற பெரிய மாகாணங்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை உள்ளடக்கி இருந்ததால், நிர்வாகம், கல்வி, நீதி வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் சிரமங்கள் இருந்தன.

மொழிக் கலாச்சாரப் பாதுகாப்பு

ஒவ்வொரு மொழிக் குழுவும் தங்கள் மொழி, கலாச்சாரம், அடையா ளத்தைப் பாதுகாக்க விரும்பினர்.

ஆந்திரப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் கோரி பொட்டி சிறீராமுலு என்பவர் 1952இல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்து உயிர் நீத்தார். இது நாடு முழுவதும் பெரும் போராட்டத்தைத் தூண்டியது. இதன் விளைவாக, மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலமாக ஆந்திரா உதய மானது (1953).

போராட்டங்களின் விளைவாக, ஒன்றிய அரசு ஃபசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் மொழிவழியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன.

மெட்ராஸ் மாகாணப் பிரிவினை:

இதன் விளைவாக, அன்றைய மெட்ராஸ் மாகாணம்  தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி களைக் கொண்டு, ஆந்திரா, கேரளா, கருநாடகத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்று தனி மாநிலங்களாக உருவாகின. நவம்பர் 1, 1956 அன்று மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

தந்தை பெரியாரின் ஆலோசனை

மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தந்தை பெரியார் ஆதரவு அளித்தார், குறிப்பாக மெட்ராஸ் மாகாணத்தைப் பிரிக்கும் விவகாரத்தில் அவரது நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது:

மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு முன், ஒன்றிய அரசு தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரம் ஆகியவற்றை இணைத்து “தட்சிணப் பிரதேசம்” என்ற ஒரே மண்டலமாக உருவாக்க முயன்றது. இந்த முயற்சியை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

இவ்வாறு உருவாக்குவது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்று அவர் கருதினார். இந்தத் திட்டத்தை எதிர்த்த போராட்டங்கள், ஒன்றிய அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட முக்கியக் காரணமாக அமைந் தன. மெட்ராஸ் தனி மாநிலமாக உருவாகும்போது, தமிழ்நாட்டின் எல்லைகளில் இருக்கும் நகரங்கள், பகுதிகளை தக்க வைக்கக் கடும் போராட்டங்களும் நடைபெற்றன.

‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கை: மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும், தமிழ் மாநிலத்தின் பெயர் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே நீடித்தது. இந்த மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன்முதலில் தீவிரமாக வலியுறுத்தியவர்களில் பெரியார் மிக முக்கியமானவர்.

பல கோரிக்கைகளுள் ஒன்றாக இதனையும் முன்வைத்து சங்கரலிங்கனார் உண்ணாநிலை இருந்து உயிர் துறந்தார். தொடர் முயற்சிகளின் விளைவாக, 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலை மையிலான தி.மு.க. அரசுதான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ‘மெட்ராஸ் ஸ்டேட்டிற்கு’ அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *