திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற (30.10.2025)
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ கூட்டத்தில்
‘பெரியார் உலக’ நிதியாக தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள், பொது மக்கள் சார்பில்

தூத்துக்குடி வெங்கட்ராமன் மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ.1,00,000 ‘பெரியார் உலக’ நிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: பால். ராசேந்திரம், காசி மற்றும் தோழர்கள்.

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ‘பெரியார் உலக’ நிதி ரூ.1,26,500, 70ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.9000அய் குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: காப்பாளர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, டாக்டர் பி.கலைச் செல்வன், மு.இராஜசேகர், மா.மணி. (களக்காடு, 30.10.2025)

*தென்காசி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் சண்முகம் தனது தாயார் பாப்பம்மாள் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தமைக்கு தனது குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்து விடுதலை சந்தா வழங்கினார். * தென்காசி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன், மாவட்டச் செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சீ.டேவிட் செல்லதுரை, கல்வியாளர் ஆலடி எழில்வாணன். (தென்காசி, 30.10.2025)
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கிரகாம்பெல் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (களக்காடு, 30.10.2025)
