திருப்பதிக்குச் சென்று திரும்பியபோது விபத்து : 6 பேர் பலி
திருப்பதி, மே 15 ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங் களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பதி மலைக்கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட் டுள்ளது.
உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை மேற்கொண்டு விசா ரணை நடத்தி வருகின்றன.