
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகர், கால்ஃபீல்டில் உள்ள டவுன் ஹாலில், பெரியார் பன்னாட்டமைப்பும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா (PATCA)வும் இணைந்து நடத்தும், 4 ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு இன்று (1.11.2025) ஆஸ்திரேலியா நேரப்படி, காலை 9 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு) தொடங்கியது.

தந்தை பெரியார் – அம்பேத்கர்
படங்கள் திறப்பு
அம்மாநாட்டின் முதல் நிகழ்வில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், அண்ணல் அம்பேத்கர் படத்தையும், ஆ.இராசா அவர்கள், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தையும் திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் காணொலி மூலம் உரையாற்றினர்.
இம்மாநாட்டில், ஆஸ்திரேலிய மக்கள் பிரதிநிதி களான இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை இயக்கத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, கத்தார், சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
