சென்னை, மே 15 சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.5.2023 அன்று காலை 11 மணியளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
இக்கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் கோ.கருணாநிதி தலைமையில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் தொடர்பான பிரச்சினைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என்று கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, (விசிக), ஆ.வந்தியத்தேவன், (ம.தி.மு.க.), சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) ஆகியோர் கலந்து கொண்டு உரை யாற்றினர்.
பிற்படுத்தப்பட்டோரின் பிரச்சினை களை எடுத்துரைத்து, நாடாளுமன்றத் திற்கு வெளியேயும் உள்ளேயும் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில், எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பாங்க் ஆப் பரோடா), என்.சிறீதர் (சிபிசிஎல்), ஏ.அழகுராஜ் (என்எல்சி), கே.ராமமூர்த்தி (அய்சிஎஃப்), டி.முத்துக்குமரன் (எம்.எஃப்.எல்.), முருகன் (ஜிஅய்சி-யுனைடெட் இந்தியா), ஆர். குமார் (சேலம் உருக்காலை), செல்வம் (பிஎச்இஎல்-திருச்சி) ஆகியோர் கோரிக் கைகள் குறித்து பேசினர். கூட்டமைப்பில் துணைத் தலைவர் ஏ. ராஜசேகரன் நன்றி கூறினார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளான ஏர் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பிஎச்இஎல் (திருச்சி), சென்சஸ், கனரா வங்கி சென்னை பெட் ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(சிறிசிலி), இ.எஸ்.அய்.சி. (ணிஷிமிசி), அய்.அய்.டி. – சென்னை, அய்.சி.எப்.(மிசிதி) சென்னை, எச்.வி.எப்.-ஆவடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை உரத் தொழிற்சாலை, மணலி, நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன், (என்எல்சி) நெய்வேலி, என் அய்ஆர்டி-அய்சிஎம்ஆர், ஜிஅய்சி – நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜிஅய்சி – யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சேலம் உருக்காலை (சேலம்), யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஓபிசி கமிட்டி – ராஜாஜி பவன் ஆகிய அமைப்பின் தோழர்கள் , மகளிர் (பாங்க் ஆப் பரோடா) உள்பட ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.