தங்கத்திற்கு மாற்றாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி

ிலை விண்ணைத்தொடும் காரணமாக தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும், குடும்ப மரபின் அடையாளமாகவும் இடம் பிடித்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதால், சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் எட்டாக்கனியாகி விட்டன.

கடந்த 1970ஆம் ஆண்டு ரூ.23க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் விலை தற்போது ரூ.11 ஆயிரத்து 500-அய் தொட்டு இருக்கிறது. அதனால் ஏழை-எளிய மக்களால் தங்கத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே விஞ்ஞானிகள் தங்கத்திற்கு மாற்றான விலை குறைவான ஒரு உலோகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் உள்ள தகவல்களில் 5 மாற்று உலோகங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

பிளாட்டினம்:- தங்கத்தை விட அரிதானதும்,விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது. தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, நீடித்த தன்மை அதிகம். ஆனால் இது தங்கத்தை விட விலை உயர்வாக இருந்தாலும், மக்களுக்கு முதலீடாகவும் இருக்கும்.

பல்லேடியம்:-பிளாட்டினத் துடன் ஒருமித்த பண்புகள் கொண்டது. வெள்ளை நிறத் தோற்றம், எடை குறைவாக இருப்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்றவற்றுக்கு ஏற்றது.

டைட்டானியம்:- இது மிகவும் இலகுவானாலும், வலிமை மிகுந்தது. ஒவ்வாமை ஏற்படாததால், நகைகளில் அதிகம் பயன்படுத்தலாம்.

டங்ஸ்டன்:- மிக வலுவானது; கீறல் எளிதில் வராது.சமீபகாலங்களில் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

வெள்ளி:- எளிமையான விலை காரணமாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விரைவில் கருமை படர்வது ஒரு சவால்.

புதிய முன்னேற்றங்கள்

அதேபோல் தங்கத்தின் சிறப்பே அது பொன்னிறமாக மின்னுவதுதான். எனவே ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’, டைட்டானியம் போன்ற மலிவு உலோகங்களுக்கு தங்க நிறம் தரும் டைட்டானியம் நைட்ரேட் பூச்சு போட்டு, உண்மையான தங்கம் போல தோற்றமளிக்க முடியும்.

வெள்ளி தங்கக்கலவையை நானோ அளவில் வடிவமைத்து, தேவையான வண்ணத்தையும், பிரகாசத்தையும் உருவாக்கலாம். இதனால், கலைரீதியான பல நிற ஆபரணங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாத டைட்டானியம், நையோபியம் போன்ற உலோகங்களை அடிப் படையாகக் கொண்டு நகைகள் தயாரிக்கலாம்.

இது தவிர ஆய்வகத்தில் செயற் கையாக உருவாக்கப் படும் தங்கம் தொடர்பான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது உண்மை யான தங்கத் துடன் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், உற்பத்தி செலவு அதிகமுள்ளதால், வணிக ரீதியில் இன்னும் அமல்படுத்த
வில்லை. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளன.

தங்கம் என்பது நம் பாரம்பரியம், நம்பிக்கை, முதலீடு ஆகியவற்றின் சின்ன இருப்பதால் அதை முற்றிலும் மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், அன்றாடம் அணிவதற்கான ஆபரணங்களில் டைட்டா னியம், பல்லேடியம், பிளாட் டினம், டங்ஸ்டன் போன்ற உலோகங்களும், தங்கம் போல் தோற்றமளிக்கும் பூச்சுகளும் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வருங்காலத்தில் நம்முடைய நகைக்கடைகளில் தங்கம் மட்டுமல்லாது, விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் புதிய உலோகங்களும் பிரகாசமாக காட்சி அளிக்க போகிறது. எனவே தங்கம் இல்லாவிட்டாலும், அதற்கு இணையான வேறு ஆபரணங்களும் சந்தைக்கு வர இருக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *