வைத்தீசுவரன்கோயில், மே 15- தமிழ்நாடு நூலகத்துறை இயக்குநரின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீசுவரன்கோயில் அரசு கிளை நூலகத்தில் மாணாக் கர்களுக்கான கோடைப் பயிற்சி முகாம் நூலக வாசகர் வட்டம் சார்பில் 14.5-.2023 அன்று நூலகத் தில் நடைபெற்றது. நூலக வாசகர் வட்டத் தலைவர் வே. அகோரம் தலைமை வகித்தார். வாசகர் வட்டச் செயலாளர் எம். பாலசுப் பிரமணியன் முன்னிலை வகித்தார். நூலகர் பி. ரகுநந்தனன் வரவேற்பு ரையாற்றினார்.
பயிற்சியில் அய்ந்தாம் வகுப்பு முதல் பனி ரெண்டாம் வகுப்புவரை பயிலும் 25 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கதை சொல்லுதல். திருக்குறள் ஒப்புவித்தல். நூலகத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் நூலக நண்பர்கள், திட்ட ஒருங் கிணைப்பாளர்கள் எஸ்.மோகனா. கா. மாணிக்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தா ளர் மன்ற துணைத்தலைவர் ஞான. வள்ளுவன் கல்வியில் அக் கறையோடு இருப்பது,. ஒழுக்கத்து டன் நடந்து கொள்வது போன்ற வற்றில் தந்தை பெரியார் கூறிய அறிவுரைகளை தனது சிறப்புரை யில் மாணாக்கர்களிடம் எடுத்துக் கூறினார்.
அனைத்து மாணாக்கர்களுக் கும் பெரியாரின் நூல்கள் பரி சளிக்கப்பட்டன. 14 ஏழை மாண வர்களுக்கு நூலக உறுப்பினர் கட்டணம் செலுத்தப்பட்டது. இறுதியாக நூலக அலுவலக உதவியாளர் இரா. செந்தில்நாதன் நன்றி கூறினார்.