31.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் கூட்டுக் குழு கோரிக்கை.
* உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 24இல் பதவி ஏற்பார்.
* வாக்காளர் சிறப்பு திருத்தம்: மேற்கு வங்கத்தில் மம்தா கடும் எதிர்ப்பு; கடைசித் துளி ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என சபதம்.
* அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி சரண்; பீகாரில் எந்த வளர்ச்சியும் நிதிஷ் – மோடி ஆட்சியால் செய்திட முடியாது, ராகுல் காட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் பி.எம்.சிறீ (PM-SHRI) திட்டம் “குழந்தைகளை மூளைச்சலவை செய்ய” உள்ளன, மேலும் அவை அனைத்தும் சித்தாந்த ரீதியாக “ஒரு திசையில் சாய்ந்துள்ளன” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசாவில் 50க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகங்களின் பிரதிநிதிகள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிரை சந்தித்து, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் (OBC) புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநில அரசுக்கு வழிகாட்டுதல் மற்றும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிலும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனுவை சமர்ப்பித்தனர்.
* தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்த முடிவு தொடர்பாக நவம்பர் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கேரள அரசு நடத்த உள்ளது.
தி இந்து:
* “ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நின்றதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் காரணம் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார்… ஆனால், நமது பிரதமருக்கு டிரம்பை எதிர்கொள்ள, அவர் பொய் சொல்கிறார் என்று சொல்ல தைரியம் இல்லை. மோடி அமெரிக்கா செல்லவிருந்தார்…. ஆனால் டிரம்பிற்கு பயந்து அவர் செல்லவில்லை, ” ராகுல் கண்டனம்.
* ஒன்றிய தொழிலாளர் அமைச்சகத்தின் வரைவு கொள்கையான ‘ஷ்ரம் சக்தி நிதி 2025’ திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கேரள அரசு கோரியுள்ளது, தொழிலாளர் அமைச்சர் வி. சிவன் குட்டி அதை தொழிலாளர் விரோதக் கொள்கை என்று கூறியுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் ஒரு பகுதியாகும் என அமைச்சர் விளக்கம்.
தி டெலிகிராப்:
* நான்காண்டுகள் பணிக்கு பிறகு அக்னி வீரர்கள், காலனிகளில் பாதுகாவலர்களாக (செக்யூரிட்டி) ஆக்க முயலும் மோடி அரசு: ‘இது தான் பாஜகவின் தேசபக்தி’ என காங்கிரஸ் விமர்சனம்.
– குடந்தை கருணா
