கோபி, அக். 31– கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 11.10.2025 அன்று காலை 10.30 மணியளவில் கோபி சீதா திருமண மண்டபத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோபி. சீனு.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.
பெரியார் பெருந்தொண்டர் இரா.சீனிவாசன், காப்பாளர் ந.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபி.குப்புசாமி வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து பேச்சுப் போட்டி நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் கீழ்க்கண்ட மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
முதல் பரிசு:
இ. வின்ஷா மெர்லின் கோல்டு, ஜெ.கே.கே.மருந்தியல் கல்லூரி, கோபி.
இவருக்கு ரூ3000 மற்றும் நினைவுக் கேடயம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சீனு .தமிழ்ச்செல்வி தனது சார்பில் வழங்கினார்.
இரண்டாம் பரிசு:
1] மோ.கிருபானந்தம், ஜெ.கே.கே.முனி ராஜா மருந்தியல் கல்லூரி, கோபி
2] பி.மனிஷா, ஜெ.கே.கே.முனி ராஜா மருந்தியல் கல்லூரி, கோபி
இவருக்கு ரூ2000 மற்றும் நினைவுக் கேடயம் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் தனது சார்பில் வழங்கினார்.
மூன்றாம் பரிசு:
சுரா.தாரணி, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கோபி
இவருக்கு ரூ1000 மற்றும் நினைவு கேடயம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தலைமை ஆசிரியர் சாந்தி தனது சார்பில் வழங்கினார்.
சிறப்புப் பரிசாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைக்கவசம், பாராட்டுச் சான்றிதழ், ரொக்கம் ரூ 200/=, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ மாணவத் தோழர்களுக்கு’ என்னும் புத்தகத்தை சுமி எலக்ட்ரிகல்ஸ் கவுளரிசங்கர் தனது சார்பில் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஈரோடு பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம், ஈரோடு புத்தக நிலைய பொறுப்பாளர் சீனு.மதிவாணன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பழனிச்சாமி, பகுத்தறிவாளர் கழக பிரச்சாரச் செயலாளர் வெள்ளத்துரை, ஆசிரியர் கருப்பசாமி, உடற்கல்வி ஆசிரியர், மருத்துவ-சுகாதார ஆய்வாளர்கள் நடுப்பாளையம் கந்தசாமி, லெட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியில் மாவட்டச் செயலாளர் விஜயசங்கர் நன்றி கூறிட நிகழ்வு இனிதே முடிவுற்றது.
