ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், மாவட்டக் கழகக் காப்பாளரும், சேலம் சுயமரியாதை சங்கக் கட்டட உறுப்பினருமான மானமிகு
க. கிருட்டினமூர்த்தி (வயது 72) அவர்கள் நேற்றிரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இயக்கத்தின் செயல் வீரரான பொறுப்பு வாய்ந்த தோழரின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் இறுதி மரியாதை செலுத்துவார்.
சென்னை தலைவர்,
31.10.2025 திராவிடர் கழகம்
தொடர்புக்கு:
அன்புசெல்வி (மகள்),
கைப்பேசி: 9600852230
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறைவுற்ற க.கிருட்டிணமூர்த்தி குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
