சிதம்பரம், அக். 31– 30.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் குமாரக்குடி சிற்பி கலைக்கூடத்தில் சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று கருத்துரை யாற்றினார்
மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலா ளர் முருகன் கடவுள் மறுப்பு கூறினார்
பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், திருமுட்டம் ஒன்றியத் தலைவர் கு.பெரியசாமி, ஒன்றியச் செயலாளர் இராஜசேகரன், காட்டுமன்னார்குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், ஒன்றிய தலைவர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர் குண சேகரன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி. சிலம்பரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.பஞ்சநாதன்,
ப.க. மாவட்டச் செயலா ளர் செங்குட்டுவன், ப.க. பன்னீர்செல்வம், ப.க.பூ.வே.அசோக்குமார், வளசக்காடு கிளை தலைவர் அரங்க.வீரமணி, கொழை செல்வராசு, பாளையங்கோட்டை க. பெரியசாமி, தொழிலாளர் அமைப்பு ஆறுமுகம், மகளிரணி சுமதி பெரியார்தாசன், ஆர்.செல்வம், செல்வராசு, பெரியார் பிஞ்சு சி.அறிவன்,ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
மாவட்டச் செயலாளர் கோவி.பெரியார்தாசன்,நன்றி கூறினார்
காட்டுமன்னார்குடி கழகத் தோழர் ஏ.ஸ்டீபனின், தாயார் அன்ன மேரி, அவர்கள் மறை விற்கு வீர வணக்கத்தையும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவு செய்யப் பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சி யில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நிதி திரட்டி டிசம்பர் 9ஆம் தேதி அன்று மாலை காட்டுமன்னார்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை காட்டு மன்னார்குடியில் டிசம்பர்-09 அன்று மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும். சிதம்பரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர், அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது
தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் கோவி.பெரியார் தாசனும், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி.இளங்கோவன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி.சிலம்பரசன்உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.
