தென்காசி, அக்.31 தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மய்யம் அமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* அடவி நயினார் அணைத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.
* ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.
* வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
* கடையநல்லூர் வட்டம் வரட்டாறு பாசன அணைக் கட்டுகள், குளங்கள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.
* தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.
* கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம், சிவசைலம் கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
