செய்திச் சுருக்கம்

நவ.1-ஆம் தேதி முதல்
ஆதாரில் வரும் முக்கிய மாற்றங்கள்

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஆதார் கார்டில் பெயர், விலாசம், பிறந்த தேதி, போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மய்யத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இணைய வழியில் மாற்றலாம்.  பான் (PAN), பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து தரவு சரிபார்க்கப்படும். ஆதாரில் மாற்றங்களை செய்ய ரூ.75 வசூலிக்கப்பட உள்ளது. மேலும், Biometric அப்டேட்களுக்கு ரூ.125 வசூலிக்கப்படும். முன்னதாக, இதற்கு ரூ.100 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் கள்ளுக்கு அனுமதி: தேஜஸ்வி

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு சட்டத்தில் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி  வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல்,  எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டம் போன்றே  பி.சி.-க்கும் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஓட்டுக்காக பிரதமர் மோடி
டான்ஸ்கூட ஆடுவார்: ராகுல்

ஓட்டுக்காக பிரதமர் மோடி எந்த நாடகத்தையும் நடத்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பீகார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்குக்காக பிரதமர் டான்ஸ் கூட ஆடுவார் எனவும், நிதிஷ்குமார் எனும் ரிமோட் கண்ட்ரோலை வைத்து பாஜக பீகாரை ஆள்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குரூப் 4 தேர்வு:
சான்றிதழ்களை பதிவேற்ற உத்தரவு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய டி.என்.பி.எஸ்.சி.,  அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்காக முதற்கட்ட தேர்வர்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள நிலையில், அவர்கள் நவ.7-ற்குள் ஒருமுறை பதிவு பிரிவில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். உரிய நேரத்திற்குள் பதிவேற்ற தவறினால், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘எஸ்.அய்.ஆர்.’ பணிகளுக்கு தவெக எதிர்ப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவதோ, இணைப்பதோ கண்டனத்திற்குரியது எனவும், இதனை தவெக எதிர்ப்பதாகவும் அருண்ராஜ் கூறியுள்ளார். வரும் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.அய்.ஆர். பணிகள் தொடங்க உள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்த்து வரும் நிலையில், எஸ்.அய்.ஆர். பணிகளுக்கான எதிரணியில் தவெகவும் இணைந்துள்ளது. திருத்தப் பணிகளுக்கு அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன.

மாதம் ரூ.8,000 உதவித்தொகை: தமிழ்நாடு அரசின் திட்டம்

58 வயதை தாண்டிய தமிழறிஞர்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்’ மூலம் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும், அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுபவர்கள் இறந்தால், நாமினிக்கு மாதந்தோறும் ரூ.3,000 கிடைக்கும். இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும்.

அப்புறம் எதுக்கு இந்த ஆதார்?

பேங்க் அக்கவுண்ட் வேலை செய்யாது, ரேஷனில் பொருள் கிடைக்காது என எச்சரிக்கை செய்து, ஆதாரை எல்லா அடையாள சான்றுகளுடனும் இணைக்க வைத்தனர். ஆனால், தற்போது ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே, அதை குடியுரிமை, பிறந்த தேதி, வசிப்பிடம் போன்றவற்றுக்கு உறுதியான சான்றாக பார்க்கப்படாது என இ.சி.அய். விளக்கமளித்துள்ளது. அப்போது ஏன் ஆதாரை வலுக்கட்டாயமாக இணைக்க வைத்தீர்கள் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *