சென்னை, அக்.31 தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35ஆவது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் மகுடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
