கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கல்லூகுளிக்கி கிராமம் காலபைரவர் மலையில் உள்ள இருளன்கமியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஒவியங்களை பள்ளி மாணவர்களுக்கான கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக்ஜோகப் தலைமையில் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கஜேந்திரகுமார், வரலாற்று ஆய்வாளர் வெ.நாராயணமூர்த்தி. தொல்லியல் துறை அலுவலர் மற்றும் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.