திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தென்காசியில் சாந்தி மருத்துவமனை அருகே டேவிட் செல்லத்துரை, ஆலடி எழில்வாணன், இல.திருப்பதி, மருத்துவர்கள் கவுதமி, தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு. சாந்தி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

ஆலங்குளத்தில் மேனாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, திமுக நகர்மன்றத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும், ஓட்டுநர் டைசன் குடும்பத்தினரும் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பளித்தனர்

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் இராசேந்திரன், நயினார் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திருநெல்வேலியில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் முனியசாமி, பால்.இராசேந்திரம், காசி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு.
