கருநாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி
கருநாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி.க்கான தேர்ச்சி சதவீதத்தை 35 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, எஸ்.எஸ்.எல்.சி–யில் 206/625 மதிப்பெண்களும், பி.யு.சி–யில் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில் 30 மார்க் எடுக்க வேண்டும்) எடுத்தால் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் மீன் சாப்பிடலாமா?
கோழிக்கறி, ஆட்டுக்கறியைவிட பலருக்கும் மீன் பிடிக்கும். தினமும் மீன் சாப்பிடலாமா என்றால், தாராளமாக என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை மூளை, கண்கள், உடல் எடையை சீராக்க, இதயப் பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆக தினமும் சாப்பிடலாம், அதேநேரம் சாப்பிடும் அளவில் கவனம் தேவை என்பதே மருத்துவர்கள் அறிவுரையாகும்.
த.வெ.க. கட்சியில் இருந்து விலகல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறினார். இது மாற்றுக்கட்சியினரை மட்டுமல்ல, சொந்த கட்சியினரையும் அதிருப்தியடைய செய்துள்ளது. நேற்றிலிருந்து இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், கரூரை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
பிப்.7-இல் இறுதி வாக்காளர்
பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்.7-ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
* நவ.4-ஆம் தேதி முதல் டிச.4-ஆம் தேதி வரை வீடு வீடாக Enumeration Forms வழங்கப்படும்.
*டிச.9-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.
*டிச.9 முதல் 2026 ஜன.8-ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். இறுதிக்கட்ட சரிபார்ப்பு பணி டிச.9 முதல் 2026 ஜன.31 வரை நடைபெறும்.
