திருப்பத்தூர், அக்.30 திருப்பத்தூர் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரைக் கைவிட்ட வாரிசுகளின் பத்திரப் பதிவை ரத்து செய்து, அந்தச் சொத்துக்கள் 4 முதியோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட் டத்தின் முதல் பெண் ஆட்சியர் சிவசவுந்திரவல்லி இந்த அதிரடி நட வடிக்கையை மேற்கொண்டார்.
பெண் ஆட்சியர்
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து, கடந்த 2019ஆம் ஆண்டு உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 5ஆவது ஆட்சியராக சிவ சவுந்திரவல்லி பொறுப்பு வகிக்கிறார். இவர் பொறுப்பேற்றபின், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கைவிடப்பட்ட முதியோரின் கண்ணீர்
குறிப்பாக, வாராந்திர குறைதீர்வு கூட்டத்தின்போது, தங்கள் பிள்ளைகள் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் கைவிட்டதாக அல்லது காப்பகத்தில் சேர்த்துவிட்டதாக முதியோர்கள் பலர் மனு அளித்து வந்தனர். அவர்களில் பலர் நடக்க முடியாமலும், சக்கர நாற்காலியிலும் வந்தனர். ஒருவேளை உணவிற்காக கோயில் வாசலில் பிச்சை எடுப்பதாகவும், உணவுக் கொடை வழங்கும் இடங்களுக்குச் சென்று உணவு சாப்பிடுவதாகவும் கதறி அழுதபடி மனுக்கள் கொடுத்தனர்.
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை
இதுதொடர்பாக, மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரான சிவசவுந் திரவல்லி, துரித நடவடிக்கைகளில் இறங்கினார். அதன் பலனாக, கடந்த 3 மாதங்களில் வாரிசுகளால் கை விடப்பட்ட 4 முதியோரின் நிலம், வீடு, கடை உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அவர்களின் வாரிசுதாரர்களிடம் இருந்து மீட்டு, மீண்டும் அந்தந்த முதியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் முதன்முறையாக செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கைக்குப் பலதரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.
சட்டத்தில் இடமுண்டு: ஆட்சியர் விளக்கம்
இதுகுறித்து ஆட்சியர் சிவசவுந்திர வல்லி கூறியதாவது: “வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது சொந்த பிள்ளைகள் சொத்து எழுதி வாங்கிக்கொண்டு பின்னர் கைவிடுகின் றனர். மூத்த குடிமக்களை (சீனியர் சிட்டிசன்) பராமரிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களி டம் இருந்து சொத்துகளை மீட்டு கொடுக்கவும் அரசு சட்டத்தில் இடம் உள்ளது.”
“மூத்த குடிமகன் சட்டத்தில் மனு அளித்தவுடன், சமூக நலத்துறை அதிகாரிகள் பிள்ளைகளையும், முதியோரையும் வரவழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகின் றனர். பெற்றோரை உரிய முறை யில் உணவளித்து, வாழ்நாள் முழுவதும் பராமரிப்போம் என்று வாரிசுகள் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தால், அது சில நாட்கள் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இந்த உடன்படிக்கையின்படி நடந்துகொண் டால் சொத்துப் பத்திரம் ரத்து செய்யப் படமாட்டாது.”
“ஒருவேளை சமரசப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், மூத்த குடிமகன் சட்டத் தின்படி மாவட்ட நிர்வாகம் பத்தி ரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி, அதன்மூலம் அவர்களது சொத்துகளை மீண்டும் பெற்றோரிடம் சேர்க்க சட்டத்தில் இடம் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 4 பெற்றோர்கள் எழுதி கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளின் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
“எங்கள் மகள் போன்றவர் மாவட்ட ஆட்சியர்”
முதியோர் நெகிழ்ச்சி
சொத்துகளைத் திரும்பப் பெற்ற 4 பெற்றோர்கள் தங்கள் நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். “எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பித்தான் சொத்துகளை எழுதிக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் சொத்துகளை பெற்றுக் கொண்டு உதாசீனப்படுத்தி விரட்டி னார்கள். ஒருவேளை சாப்பாடு போடவும் விரும்பாமல் எங்களைப் பாரமாக நினைக்க ஆரம்பித்தார்கள்.”
“இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, திருப்பத்தூர் மாவட்ட முதல் பெண் ஆட்சியர் சிவசவுந்திரவல்லியிடம் முறையிட்டோம். அவர் விசாரித்து பத்திரப்பதிவை ரத்து செய்து மீண்டும் சொத்துக்களை எங்களுக்கே திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார். நாங்கள் பெற்றெடுக்காத பிள்ளைபோல் மாவட்டத்தின் பெண் ஆட்சியர் துரிதமுறையில் செயல்பட்டு எங்கள் கண்ணீரைத் துடைத்தார்,” என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
இருப்பினும் பல்வேறு மாவட்டங் களில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வரும் முதியவர்களை காக்க விடுவதும் உதவியாளர்கள் மனுவை வாங்கி கொண்டு பின்னர் மனுவின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் முதிய வர்கள் தவிக்கும் நிலையும் உள்ளது.
பல முதியவர்கள் நேரில் செல்ல முடியாத நிலையில் இ சேவை மய்யம் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் மின்னஞ்சலில் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பபடும் முதி யோர்களில் கோரிக்கைக்கு எந்த பதிலும் அனுப்படுவதில்லை. முதி யோர்கள் நேரில் வர இயலாத நிலையில் தான் தெரிந்தவர்கள் மூலம் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அதனை கண்டுகொள்ளாமல் நேரில் வந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்காமல் பல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
