ஜெயங்கொண்டம், அக். 30- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை மன்றத்தின் சார்பில் மாணவர்கள் விளைவித்த முள்ளங்கி, அவரைக்காய்,முருங்கைக்காய்,பாவற்காய் ஆகிய காய்கறிகள். விடுதிக்கு வழங்கப்பட்டது
பூச்சுக் கொல்லி உரம் தெளிக்காமல் இயற் கை உரம் தெளித்து இயற்கையின் மகத்துவம் பற்றிய நுணுக்கங்கள் மாணவர்கள் அறிந்தனர் .இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, பசுமை மன்றம் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டினர். இந்நிகழ்வு மூலம் மாணவர்களுக்கு சுயநம்பிக்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய வற்றின் முக்கியத்துவம் எடுத்துக்கூறப்பட்டது.
