திருச்சி, அக்.30- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக “சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன தயாரிப்புகள் (Modern Eco-Friendly Products Expo)” என்ற தலைப்பில் 10.10.2025 அன்று கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாண வர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாது காப்பை முன்வைக்கும் படைப்புகளைக் காட்சிப் படுத்தினர். நிகழ்ச்சிக்கு நடுவராகப் பள்ளியின் இளங்கலை ஆங்கில ஆசிரியை ஆர். உமா மகேஸ்வரி பங்கேற்று, சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர் களைத் தேர்ந்தெடுத்தார், வகுப்பு வாரியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா பரிசுகள் மற் றும் பாராட்டுச் சான்றி
தழ்கள் வழங்கிச் சிறப் பித்தார்.
நிகழ்விற்கான ஏற்பாடு களைப் பள்ளியின் இளங்கலை அறிவியல் ஆசிரியை எல்.ஜெயந்தி உள்ளிட்டக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
