லேசர் கதிர்வீச்சு மூலம் மழைப்பொழிவு சாத்தியமா? அபுதாபி தொழில்நுட்ப மய்ய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

2 Min Read

அபுதாபி, அக்.30– ​  அபுதாபி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மய்யத்தின் (டி.அய்.அய்) ஆராய்ச்சியாளர்கள் அமீரக மழை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்திய ஆராய்ச்சியில் லேசர் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தில் மழைப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள் ளனர்.

ஆய்வக சோதனை

சாதாரணமாக மழைப்பொழிவு என்பது தண்ணீர் ஆவியாகி மேகக்கூட்டம் உருவாகி அது குளிரும் போது பெய்வது ஆகும். இதில் செயற்கையாக கிளவுட் சீடிங் முறையில் சில ரசா யனங்களை பயன்படுத்தி மேகத்தை குளிர்வித்து மழைப்பொழிவை உண்டாக்கலாம். உலகில் அமீரகம், இந்தியா உள்பட நாடுகள் வெற்றிகரமாக இதனை செய்து வருகின்றன. பொதுவாக மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் இதுபோன்ற மாற்று தொழில்நுட்ப வழிகள் மூலம் மழை பெறப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக லேசர் கதிர்வீச்சு மூலம் மழைையத் தூண்ட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ஆராய்ச்சி கட்டுரை வடிவில் மட்டுமே இருந்த இந்த புதிய வழிமுறை தற்போது அமீரக ஆய்வகத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தின் மழை மேம்பாட்டு திட்டத்தி ற்காக தேசிய வானிலை ஆய்வு மய்யத்துடன் இணைந்து அபுதாபி தொழில்நுட்ப கண்டு பிடிப்பு மய்யத் தின் சார் பில் ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

லேசர் மூலம் மழைப்பொழிவு

லேசர் மூலம் மழைப் பொழிவு செய்யப்படுவது லேசர் இன்டியூஸ்டு கண்டன்சேஷன் அல்லது லேசர் இன்டியூஸ்டு கிளவுட் சீடிங் என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

இதற்கு சக்திவாய்ந்த அல்ட்ரா ஷார்ட் லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த லேசர் கதிரை உருவாக்கும் கருவிகளைப் பாலைவன பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகளில் பொருத்தி னால் போதுமானது.

அதில் இருந்து வெளியாகும் கதிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்களை சிதைத்து நுண் துகள்களை (மின்னேற்றம் செய்யப்பட்ட அயனிகள்) உருவாக்கும். இவைகள் நீராவி துகள்களை ஈர்த்து ஒரு நியூக்கிளியஸ் (கரு) போல செயல்படும்.

இதனை தற்போது அபுதாபியில் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மய்யத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஆய்வக சோதனை நடத்தினர்.

மைல்கல்:

இதில் லேசர் கதிர்கள் நீர்த்துளிகளை உருவாக்கி உள்ளது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில் அடுத்த கட்டமாக அமீரகத்தில் ஹஜார் மலைத்தொடர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடமாடும் லேசர் கதிர்வீச்சு கருவிகளை பயன்படுத்தி மேகங்களில் மழையை தூண்டுவதற்கான நடைமுறைகள் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதற்கான சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் வெற்றியடையும்பட்சத்தில் கிளவுட் சீடிங் முறையுடன், லேசர் கதிர்வீச்சும் இணைந்து அமீரகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *