திருச்சி, அக். 30- திருச்சியில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எ.தருணிகா ஜாஸ்மின் 12.10.2025 அன்று இணைய வழியில் நடைபெற்ற, கல்வி உதவித் தொகைக்கான, ஆகாஷ் தேசிய திறனாய்வு (ANTHE) தேர்வில் தன்னுடைய திறமையால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அவர், ஜே.இ.இ. (JEE) நுழைவுத் தேர்விற் கான பிரிவில், 10ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடத்திட்டத்தில் முழுமையான 100 சதவீதம் மதிப்பெண் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அது மட்டுமின்றி, மாவட்ட அளவில் 4ஆம் இடம் மாநில அளவில் 79ஆம் இடம் தேசிய அளவில் 1864ஆம் இடம் பெற்றுள்ளார்.
அவரது திறமைப் பாராட்டும் வகையில் ஆகாஷ் நிறுவனம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்
றிதழ் வழங்கிச் சிறப்பி த்துள்ளது.
பள்ளித் தாளாளர் , முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவி தருணிகாவைப் பாராட்டி, எதிர்காலத்தில் மேலும் பல உயர்ந்த நிலைகளை அடைய வாழ்த்தினர்.
