தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் உட்பட ரூ. 314 கோடியில் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

2 Min Read

அரசு, தமிழ்நாடு

மயிலாடுதுறை, மே 16 – மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ.314.89 கோடி செலவில் மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்ட டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (15.5.2023) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம் முதுநகரில் ரூ.100 கோடியில் புனரமைக் கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், சி.புதுப்பேட்டை மீன் இறங்கு தளத்தில் ரூ.5 கோடியில் அமைக் கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மீன் உலர் தளம், சாலை வசதி. லால்பேட்டை அரசு மீன்பண்ணையில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள், கடலூரில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன்வளம் – மீனவர் நலத்துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலக கட்ட டம், பயிற்சி மய்யக் கட்டடம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு, தெற்கு மீன் இறங்குதளத்தில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டி-ஜெட்டிகள் மற்றும் மீன் ஏலக் கூடங்கள், ரோச்மா நகர் மீன் இறங்குதளத்தில் ரூ.9 கோடியே 91 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நேர்கல் சுவர், மீன் ஏலக்கூடம், மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடி கிராமத்தில் ரூ.29 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஜீவா நகர் (திருச்செந்தூர்) கிராமத்தில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள மீன் இறங்குதளம், இனிகோ நகர் – மீனவர் குடியி ருப்பில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக் கூடம் உள்பட மீன்வளத்துறை சார்பில் மொத்தம் ரூ.314.89 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட் டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் ந.கவுதமன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *