டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 பீகாரில் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு: ‘கள்’ விற்பனைக்கு அனுமதி என வாக்குறுதி.
* வாக்காளர் பட்டியலை திருத்தி ஆட்சிக்கு வர தப்புக்கணக்கு – பாஜக கனவு தமிழ்நாட்டில் பலிக்காது: மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த திட்ட செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயக நடைமுறையை அவமதிக்கும் செயல்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து.
* தமிழ்நாட்டைப் போல், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த தெலங்கானா அரசு முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நாகர்கள் தனி; இந்தியர்கள் தனி’: நாகா இறையாண்மை குறித்து நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் பொதுச் செயலாளர் துய்ங்கலெங் முய்வா உறுதி. “அவர்கள் (இந்திய அரசு) இறுதி எச்சரிக்கைகளை வழங்கத் தொடங்கினர்… என்ன நடந்தாலும், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்று அவர்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியர்கள் யார், அவர்களின் வரலாறு எங்களுக்குத் தெரியும்,” என பேச்சு.
* ஆளும் காங்கிரசுக்குள் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் ஆர்வலர் டாக்டர் சிறீதரை திங்களன்று ‘யேஷாஸ்வினி கூட்டுறவு உறுப்பினர்களின் சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளையிலிருந்து மாநில அரசு நீக்கியது.
தி இந்து:
* கரூரில் பாதிக்கப்பட்டவரின் மனைவி நடிகர் விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் உதவித் தொகையை திருப்பி அனுப்பினார். விஜய் தன்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாததால் வருத்தமடைந்ததாக சங்கவி பெருமாள் தெரிவித்தார்.
* ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு பாதுகாவலர்கள் (செக்யூரிட்டி) பணியா?அரசுக்கு காங்கிரஸ் கண்டனம். பிரதமர் மோடி அரசு ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்து இருந்தது. ஆனால் இப்போது உள்துறை அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வு பெறும் அக்னி வீரர்கள் நாட்டின் முதல் 10 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பாதுகாவலர்களாக (செக்யூரிட்டி) இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
* மோடி-நிதிஷ் அரசு, பீகார் இளைஞர்களின் விருப்பங் களை நசுக்கியது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* கணிதம் கலாச்சார தேசியவாதத்திற்கான ஒரு கருவி அல்ல, பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் துணைப் பேராசிரியர் சி.பி. ராஜேந்திரன் கவலை: இது மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் “கடுமையான குறைபாடுகளால் நிறைந்துள்ளது” என கல்வியாளர்கள் வாதிட்டனர்.
தி டெலிகிராப்:
* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ‘பாஜகவின் விளையாட்டில் சிப்பாயாக செயல்படு கிறார், திரிணாமுல் காங்கிரஸ் அபிஷேக் பானர்ஜி கண்டனம்.
* ஒன்றிய அரசின் வரைவு தொழிலாளர் கொள்கை: மனுஸ்மிருதி மற்றும் பண்டைய நூல்களைப் பயன் படுத்துவதாக வல்லுநர்களும் தொழிற்சங்கங்களும் விமர்சனம்.
– குடந்தை கருணா
