மதுரை, அக். 29- மதுரை அனுப்பானடியில் வாழ்ந்த திராவிட இயக்க உணர்வாளரும், திராவிட இயக்கத்தலைவர்களின் உழைப்பின் பயனை உணர்ந்து அத்தலைவர் களிடத்தில் மிகுந்த நன்றி உணர்வோடு வாழ்ந்து மறைந்த மீ.செல்வ மணி அவர்களின் வாழ் விணையரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளரும், சென்னை பெரியார் திடலில் தொடர்ந்து தன் பரப்புரையைச் சிறப்பாகச் செய்துவரும் புதுமை இலக்கியத்தென்றல் அமைப்பின் தலைவரும், யூனியன் வங்கிப் பொது மேலாளராகப் பணிநிறைவு பெற்றவருமான செல்வ.மீனாட்சிசுந்தரம், மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி பணி நிறைவு – செல்வ.சேகர்,நீதிமன்றம் பணிநிறைவு- செல்வ. காளீஸ்வரி ,காயிதேமில்லத் அரசு கல்லூரி கண் காணிப்பாளர் செல்வ.வளர்மதி, பொதுப்பணித் துறை செல்வ.செல்வி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ.காளிகண்ணன்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் செல்வ.பூங் கொடி ஆகியோரின் தாயாரும், திமுக மகளிரணி ஊடகத்துறைப் பொறுப்பாளர் மருத்துவர் ப.மீ.யாழினியின் பாட்டியுமான செல்வ.காளியம்மாள் (வயது 82) 27.10.2025 காலை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
திராவிடர் கழகத்தின் தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன் ராசா, வே.செல்வம், கழக மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேசு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் வா.நேரு, மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலை வர் ச.பால்ராசு மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ந.முருகேசன், இரா.திருப்பதி,பவுன்ராசா, பேக்கரி கண்ணன்,சிவா, விராட்டி பத்து சுப்பையா, பெரி.காளியப்பன் திரா விடர் இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராம.வைரமுத்து மாவட்டத் தலைவர் அமர்நாத், ஸ்டூடியோ சரவணன் உள்ளிட்ட பலரும் மலர்வளையம் வைத்து அம்மா அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்தினர்.
அம்மையார் அவர்களின் இறுதி நிகழ்வு 28.10.2025 காலை 11 மணி அளவில் நடைபெற்றது.மதுரை ஓம் முருகா நகர் முக்கிய சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மின் மயானத்தில் எந்த விதமான மூடச்சடங்குகள் இல்லாமல் நடைபெற்றது.
