சென்னை, அக் 29 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்கள் நேற்று (28.10.2025) முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) அமைப்பின் சார்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டில், ஆ. ராசா அவர்கள் ‘மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமை’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இதனையொட்டியே அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் சமூகநீதிச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
