இஸ்ரோவில் டெக்னீசியன்
பணியிடங்கள்
‘இஸ்ரோ’ கீழ் செயல்படும் ‘ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில்’ காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டெக்னீசியன் -பி’ பதவியில் அய்.டி., 15, எலக்ட்ரானிக் மெக்கானிக் 15, எலக்ட்ரீசியன் 8, ஏ.சி., 7, பிட்டர் 4, மெஷினிஸ்ட் 3, கெமிக்கல் பிளான்ட் அசிஸ்டென்ட் 2, பார்மசிஸ்ட் 1 என மொத்தம் 55 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அய்.டி.அய்.,/டிப்ளமோ
வயது: 18-35 (13.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 (ரூ. 400 ரீபன்ட்). எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 (முழுவதும் ரீபன்ட்).
கடைசிநாள்: 13.11.2025
விவரங்களுக்கு: sac.gov.in
எல்லைச் சாலை நிறுவனத்தில் பணிகள்
ஒன்றிய அரசின் எல்லைச் சாலை நிறுவனத்தில்
(பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
வெகிக்கிள் மெக்கானிக் 324, டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக் 205, பெயின்டர் 13 என மொத்தம் 542 இடங்கள் உள்ளன.
வயது: 18-25 (24.11.2025ன் படி)
கல்வித்தகுதி: அய்.டி.அய்.,
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, டிரேடு தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Commandant, GREF Center, Dighi Camp, Pune – 411 015.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.11.2025
விவரங்களுக்கு: bro.gov.in
