சென்னை, அக். 29- வடகிழக்கு பருவமழை காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.
பருவ மழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அதிகளவில் சேதம் அடைந்துள்ளது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை செயலாளர்கள் கொண்ட குழுவினர் சேதம் அடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்காக வட்டார அளவில் வேளாண்மை மற்றும் வரு வாய்த்துறையினர் கொண்டு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
கணக்கெடுப்பு
அதன்படி, 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய (28.10.2025) நிலவரப்படி தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டத்தில் 4,437 ஹெக் டர் நிலமும், மற்ற மாவட்டத்தில் 517 ஹெக்டர் நிலமும் என மொத்தம் 4,954 ஹெக்டர் நிலம் 33 சதவீதத்திற்கு மேல் சேதம் அடைந்து இருக்கிறது. மொத்தம் 14 ஆயிரத்து 499 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட பின்பு நெல்கொள்முதல் நிலையங்கள் முன்பு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு நெல் மூட்டைகள் மழையால் எவ்வளவு சேதம் அடைந்து இருக்கிறது? மூட் டைகளிலேயே எவ்வளவு நெற்கதிர்கள் முளைத்து, விவ சாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற கணக்கெடுப்பும் நடக்கிறது.
நிவாரணம்
இன்னும் ஒரு வாரத்தில் முழுமையான கணக்கெடுப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான நிவாரண தொகையினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
