திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை (வயது 86) மறைவிற்கு மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வெள்ளைப்பாண்டி, வள்ளியூர் நகர கழகச் செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஞானதிரவியம், இராஜா ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
