திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் (ஒரத்தநாடு வட்டம்) கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன்-மகேஸ்வரி ஆகியோரின் மகள் சு.இதழினி தமிழ்நாடு அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியில் (நாகர்கோயில்) இடம் பெற்றார்.
27-10-2025 மதியம் 12 மணிக்கு கருவழிக்காடு அவர்களது இல்லத்திற்கு சென்று இதழினி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பயனாடை அணிவித்து கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் பெரியார் நகர் அ.உத்திராபதி ஆகியோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
