டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசியல் கட்சி ‘ரோடு ஷோ’-க்களுக்கு 10 நாள்களில் வழிகாட்டு நெறிமுறை: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவைக் காப்பாற்றும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
* “அன்று கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய உயர்வுக்கு திராவிட இயக்கமே காரணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணி சார்பில் பொதுத் தேர்தல் அறிக்கையை செவ்வாய் அன்று வெளியிட முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எஸ்.அய்.ஆர். திட்டத்திற்கு எதிர்ப்பு – தமிழ்நாடும், மேற்கு வங்கமும்: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் திருத்த (SIR)” திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு. திமுக இதை “வாக்குரிமை பறிக்கும் சதி” என கூறி அனைத்துக் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது என குற்றஞ் சாட்டியது.
* உமர் அப்துல்லா குற்றச்சாட்டு: பாஜக அரசு, நாட்டின் 15% மக்களை ஒன்றிய பிரதிநிதித்துவத்தில் இருந்து விலக்கியுள்ளது என குற்றச்சாட்டு. காஷ்மீர்–ஜம்முவில் மதம், பிரதேசம் அடிப்படையில் பாகுபாடு இருக்காது என உறுதி அளித்தார்.
தி இந்து:
* கேரள சி.பி.அய். அமைச்சர்கள் புறக்கணிப்பு: ஒன்றிய அரசின் பி.எம்.சிறீ (PM SHRI) பள்ளித் திட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெறாவிட்டால் அமைச்சரவை புறக்கணிப்போம் என சி.பி.அய். அறிவிப்பு. முதலமைச்சர் பினராயி விஜயனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.
* பீகாரில் ராகுல் காந்தி பிரசாரம் தொடக்கம்: ராகுல் காந்தி புதன்கிழமை முகசப்பூர், தர்பங்கா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
* தகவல் ஆணையர் பதவிகள்: “இரண்டு அல்லது மூன்று வாரங்களில்” மத்திய தகவல் ஆணையர் (CIC) காலி இடங்கள் நிரப்பப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் ஆணையத்திற்கான நியமன செயல்முறை குறித்த முழுமையான தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், “எந்தவொரு வெளிப்படை தன்மையும் இல்லாமல் பெயர்கள் கைவிடப்பட்டுள்ளன” என்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பிரதிநிதித்துவப்படுத்திய மனுதாரர்கள் எதிர்த்தனர்.
தி டெலிகிராப்:
* காங்கிரஸ் குற்றச்சாட்டு — வாக்குத் திருட்டு: எஸ்.அய்.ஆர் SIR திட்டத்தின் பெயரில் 69 லட்சம் வாக்காளர்கள் பீகாரில் நீக்கப்பட்டுள்ளனர், இது “ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்” என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உத்தவ் தாக்கரே — தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை: வாக்காளர் பட்டியலில் தவறுகள் திருத்தப்படாவிட்டால், எதிர்க்கட்சிகள் “உள்ளூராட்சி தேர்தல்களை புறக்கணிக்கலாம்” என எச்சரிக்கை. “அதிகாரத்திற்கு வந்ததும் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்வோம்” என எச்சரிக்கை.
– குடந்தை கருணா
