பொள்ளாச்சி. அக். 28- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 மணியளவில் பொள்ளாச்சி தி.மு.க. அலுவலகத்தில். பொள்ளாச்சி, கோவை, தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை, மாவட்டங்களின் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கருத்துரை யாற்றினார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக-பொன் முடி, பொள்ளாச்சி மாவட்டக் காப்பாளர் தி. பரமசிவம், நீலமலை மாவட்டக் காப்பாளர் மருத்துவர் இரா.கவுதமன், திருப்பூர் மாவட்டக் காப்பாளர் அ.இராமசாமி, தாராபுரம் மாவட்டக் காப்பாளர் கே.என். புள்ளியான், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நீலமலை மாவட்ட தலைவர் மு.நாகேந்திரன், தாராபுரம் மாவட்டச் செயலாளர் ஜெ.தம்பி பிரபாகரன், கோவை மாவட்டச் செயலாளர் ஆ.பிரபாகரன், மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் சு.ரெங்கசாமி, நீலமலை மாவட்டச் செயலாளர் ச.ஜீவா, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ப. குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரி முத்து, அனைவரையும் வர வேற்றார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றி வேல், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.செழியன், பொள்ளாச்சி மாவட்ட துணைத் தலைவர் சு. ஆனந்தசாமி, நகரத் தலைவர் சு.வடிவேல், ஆனைமலை ஒன்றிய செயலாளர் அ.முருகானந்தம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.பிரவீன்குமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வி.வருண்குமார், ஊத்துக்குளி கிளைச் செயலாளர் இல.மனோஜ் குமார், தாராபுரம் கழக பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெங்கடாசலம், மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் தங்கவேலு, ஒன்றிய துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட தொழிலாளர் அணி சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வினோத், நகரச் செயலாளர் அர்ஜுனன், நகரச் செயலாளர் கண்ணன், உடுமலை நகர செயலாளர் முருகேசன்,
கோவை கழக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன், மாநகர செயலாளர் புலியகுளம் வீரமணி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடாசலம், மதுக்கரை ஒன்றியச் செயலாளர் சிவக்குமார்.
திருப்பூர் மாவட்டம்
அவிநாசி நகரத் தலைவர் – கருப்புச் சட்டை பழனிச்சாமி, தொழிலாளர் அணி- இராமச்சந்திரன், இளைஞரணி – காளிமுத்து, புத்தக விற்பனையாளர் மைனர், நீலமலை பொதுக்குழு உறுப்பினர் இராவணன், பொதுக்குழு உறுப்பினர் அரங்கசாமி, நகர செயலாளர் சந்திரன், தமிழ்மணி, ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை, உள்ளாட்சி நகர அமைப்பாளர் வீரமலை, மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் தங்கவேல் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், நன்றி கூறினார்.
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு பொள்ளாச்சி, கோவை, தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை, மாவட்ட கழக சார்பில் மாவட்டத்திற்கு தலா 10,00,000 நிதி திரட்டி நவம்பர் 22 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பெரியார் உலக நிதி விடுதலை சந்தா
நீலமலை மாவட்ட காப்பாளர் பெரியார் மருத்துவ குழுமத்தின் தலைவர் குன்னூர் டாக்டர் கவுதமன் மூலமாக பெரியார் உலகத்திற்கு வசூலிக்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய்க்கு காசோ லையாகவும் மற்றும் திருப்பூர் மாவட்ட காப்பாளர் அவிநாசி ராமசாமி மூன்று விடுதலை 6 ஆயிரம் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
