நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அளவளாவிய அமெரிக்க மருத்துவர்கள்

திராவிடர் கழகம்

திருச்சி,  அக். 28- பெரியார் பன்னாட்டு அமைப்பு,  அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன்,  அவரது இணையர் மருத்துவர் சரோஜா இளங்கோவன் இருவரும் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் மறக்காமல் செல்லும் இடம் ஒன்றுண்டு. அது திருச்சி பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள நாகம்மையார் குழந் தைகள் இல்லம்.

தந்தை பெரியார் அவர்களால் 1959இல் ஆரம்பிக்கப்பட்டு, அன்னை மணியம்மையார் அவர்களால் வளர்க்கப்பட்ட நிறுவனம். இன்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களால் வளர்ந்தோங்கி நிற்கும் குழந்தைகள் இல்லம்.

26.10.2025 மதியம் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர் களும் மருத்துவர் அம்மா சரோஜா இளங்கோவன் அவர்களும் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு வருகை தந்தனர். பெரியார் ஆரம்பப்பள்ளி பொறுப்பாளரும் திருச்சி  மாவட்ட கழகத்தலைவருமான ஆரோக்கியராஜ் மருத்துவர்கள் இருவரையும் வரவேற்று நிகழ்வுக்கு வந்திருந்த  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சிறப்பு விருந் தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி,  ஆரோக்கியராஜ் சிறப் பித்தார்.

மருத்துவர் சோம.இளங்கோவன் முதலில் குழந்தைகளோடு கலந்து உரையாடினார். திருச்சி அருகில் உள்ள பிச்சாண்டார் கோவிலில் பிறந்த நான், எப்படி உங்களைப் போல சிறு குழந்தையாக இருக்கும்போது மரம் ஏறி மற்றும் பல விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தேன். படித்தேன். மருத்துவர் ஆனேன். இன்று அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறேன்.அதைப்போல திருச்சி அருகில் உள்ள கல்கண் டார்கோட்டையில் பிறந்த எனது இணையர்  சரோஜா அவர்கள்,  நன்றாகப் படித்தார்கள்.

மூளை நரம்பியலில் சிறப்புப் பட்டம் பெற்று அமெரிக்காவில் மருத்துவர் ஆனார்கள் என்று குறிப்பிட்டு நீங்களும் படித்து முன்னேறவேண்டும் என்று குறிப்பிட்டு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை 25.10.2025 அன்று சென்னையில் சந்தித்தேன். உற்சாகமாக, நன்றாக இருக்கிறார்.  நாமெல்லாம் அவரது பணிகளுக்கு உறு துணையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு நாகம்மையார் இல்லத்து பொறுப்பாளர்களைப் பாராட்டி உரையாற்றினார்.

தொடர்ந்து கழகச் சொற் பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து  மருத்துவர் அம்மா சரோஜா இளங்கோவன் குழந்தைகளைப் பாராட்டி,  நன்றாகப் படிக்க வேண்டும் என்று  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்து குழந் தைகளை அறிவுறுத்தினார்.

தனது படிப்பு பற்றிய விவரங்களையும், தான் படிக்கும் காலத்தில் இருந்த சூழலையும் விளக்கினார். ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்த பின் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் தான் முழுமையான பகுத்தறிவு வாதியாக மாறியதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு முதன் முதலில் இருதய அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடந்த போது உடன் இருந்து முழுக்க முழுக்கப் பார்த்துக்கொண்டவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.

இன்றுவரை அவரின் உடல் நலத்தில் பெரும் அக்கறை எடுத்துக்கொள்பவர். மருத்துவர்கள் இருவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா,  சிறப் பாக நடைபெறுவதற்கு அடிப் படையாக இருப்பவர்கள் மட்டுமல்ல தமிழ் சார்ந்தும் தமிழர்கள் சார்ந்தும் பல பணி களைச் செய்பவர்கள்.

‘அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்’ என்னும் அய்யா சோம.இளங்கோவன்  புத்தகம் அவரின் அத்தனைப் பணி களையும் நாம் தெரிந்துகொள்ள பெரும்வாய்ப்பு. இருவரும் அவ்வளவு பிசியாக இருப்ப வர்கள்.அவர்கள் இவ்வளவு நேரம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் செலவழிப்பது பெருஞ் சிறப்பு எனக் குறிப்பிட்டு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் வா.நேரு வாழ்த்துரைத்தார்.

நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொறுப்பாளர் சாந்தி நன்றியுரை வழங்கினார்.

தொடர்ந்து புலால்-பிரி யாணி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.குழந்தைக ளுடன் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும்,  மருத்துவர் அம்மா சரோஜா இளங்கோவன் அவர்களும், வந்திருந்த அவர்கள் இருவ ரின் இரத்த உறவுகளும், கழகக் கொள்கை உறவுகளும் உணவருந்தினர்.அளாவளாவி மகிழ்ந்தனர்.

நிகழ்வில் அமெரிக்காவில் வசிக்கும் இளமாறன் அவர்களின் பெற்றோர்கள். எழுத்தாளர் பேரா.அழகுச்செல்வம் திருச்சி மாவட்ட கழக செயலாளர் மகாமணி,  மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் அம்பிகா கணேசன்,  திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர்,  பூவை புலிகேசியின் வாழ்விணையர் ஆசிரியர் விமலா,  மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவுச்சுடர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *