சென்னை, அக்.28 சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் பத்மசிறீ டாக்டர். டி.எஸ். சந்திரசேகர், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜி (ACG) அமைப்பின் ‘போர்டு ஆஃப் கவர்னர்ஸ் விருது’ பெற்று கவுரவிக்கப்பட்டார்.
அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் 26.10.2025 அன்று நடந்த அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜி ஆண்டு விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
எசிஜி-யின் இந்தியாவிற் கான பிரதிநிதியாக பணி யாற்றிய அவர் ஆற்றிய சிறப் பான பணிகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள், 35-க்கும் மேற்பட்ட பன்னாட்டு இணைய கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தது உள்ளிட்ட பங்களிப்புகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இவர் நோபல் பரிசு பெற்ற டாக்டர். பாரி மார்ஷலுடன் இணைந்து ஹெச். பைலோரி குறித்த கருத்தரங்கை நடத் தியதும் குறிப்பிடத்தக்கது.
எசிஜி, 1932-இல் நிறுவப் பட்டு, 86 நாடுகளில் 20,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் களை உள்ளடக்கிய முன்னணி அமைப்பாகும். டாக்டர். சந்திரசேகர் ஏற்கனவே பத்மசீறி, உலக இரைப்பை குடல் மருத்துவ அமைப்பின் உயரிய விருதான MWGO, பிரைட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது சாதனைகள் மருத்துவத் துறையில் உத்வேக மாக அமைகின்றன.
அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜி (ACG) பற்றி ஒரு குறிப்பு
1932-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட ACG, இரைப்பை குடல் மருத் துவத் துறையை மேம்படுத் துவதிலும், உலகளவில் மருத் துவப் பயனாளிகளின் சிகிச்சைமுறையை செம்மைப் படுத்துவதிலும் கவனம் செலுத்தும் ஒரு முன்னணி மருத்துவ அமைப்பாகும்.
இது 86 நாடுகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கல்லீரல் நிபுணர்களைப் பிரதிபலிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மிக உயர்ந்த தரமான கவனிப்பை ஊக்கு விக்கவும் இது வளங்கள், கருவிகள், கல்வி, ஆராய்ச்சிக் நிதி, ஆதரவு மற்றும் தொழில் முறை மேம்பாடுகளை வழங்குகிறது.
