சென்னை மாநகராட்சியின் பாராட்டத்தக்க செயல் கடும் மழை காரணமாக ஆறு நாட்களில் நான்கு லட்சம் பேருக்கு உணவு

சென்னை, அக்.28- வட கிழக்கு பருவமழையை முன் னிட்டு சென்னை மாநகரா ட்சியில் கடந்த 6 நாட் களில் தாழ்வான பகுதியில் உள்ள 4 லட்சம் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வடகிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் நேற்று (27.10.2025) வரை சராசரியாக 22.180 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகப ட்சமாக திருவொற்றியூர் மண்டலம் எண்ணூர் பகுதியில் 4.50 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் பொதுமக்களுக்கு நோய் த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கடந்த 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் 574 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 24 ஆயிரத்து 146 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

சுரங்கப்பாதையில் மழைநீர்…

சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மய்யங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 22-ஆம் தேதிமுதல் நேற்று வரையில் மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகளும், விழும் மரங்களை அகற்றுவதற்கு 457 மர அறுவை எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் உள்ள 22 மழைநீர் சுரங்கப்பாதைகளில் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவமழையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்ற சென்னை மாநக ராட்சியின் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர் வாரியத் தின் 2 ஆயி ரத்து 149 களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். கடந்த 15-ஆம் தேதி முதல் 454 குடிநீர் வாகனங்கள் மூலம் தடையில்லா குடிநீர் வழங்கப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *