வடகிழக்குப் பருவமழையையொட்டி, நேற்று (27.10.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் சென்ட்ரலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் முக்கிய சேவை துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
