வல்லம், அக்.27– பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் ஹேக்கத்தான் போட்டியில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்றனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் நவீனமான முறையில் கற்று தரப்பட்டு மாணவர்களை திறன் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக ஆக்குவதில் நமது தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில், முன்னணி தொழிற்சாலைகளுடன் இணைந்து நமது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமன்றி, பிற கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நமது பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் மற்றும் பிற கல்லூரி பேராசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 17.10.2025 அன்று பட்டுக்கோட்டை, டாக்டர் கலாம் பாலி டெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஹேக்கத்தான் (Hackathan) போட்டிகளில் கலந்து கொண்ட பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள் டி.தயாநிதி மற்றும் ஏ. ஜனார்த்த மணிகண்டன் ஆகியோர் TANCE HACKATHAN “PLC Programming & Applications using TIA Portal Software” என்ற தலைப்பில் தயாரித்த திட்ட மாதிரிக்கு இரண்டாம் இடத்தையும் (Second Place) மற்றும் ஏ. கின்ஸ்லிங்ராஜ் மற்றும் எம்.சந்தோஷ்பாண்டி மூன்றாமிடத்தையும் (Third Place) பெற்றனர்.
இந்த HACKATHAN போட்டியில் இரண்டாமி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 3,000 ( ரூபாய் மூவாயிரம்), மூன்றாமிடம் பெற்றவர்க ளுக்கு ரூ. 2,000 (ரூபாய் இரண்டாயிரம்) பணப்பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் 10க்கும் மேற்ப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி மற்றும் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா பாராட்டினார்கள். இந்நிகழ்வில் முதன்மையர் ஜி.இராஜாராமன், நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.அய்யநாதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
