திருச்சி, அக்.27– பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ரோபோட்டிக்ஸ் மன்றம் சார்பில், மாணவர்களின் புதுமை சிந்தனை மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் “ரோபோட்டிக் மாதிரிகளை உருவாக்கி அதன் செயல்பாடுகளை விளக்கும் போட்டி” 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையில் 13.10.2025 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் தங்களது கைவினை திறனைக் கொண்டு பல்வேறு ரோபோட்டிக் மாதிரிகளை உருவாக்கினர். சிலர் தானியங்கி வாகனங்கள், சிலர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ரோபோக்கள், சிலர் மீட்புப் பணிகளில் பயன்படும் ரோபோக்கள் போன்ற புதுமையான மாதிரிகளைக் காட்சிப்படுத்தினர். மாணவர்கள் உருவாக்கிய மாதிரிகளின் செயல் முறை, பயன்பாடு, மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து தங்களது எளிய சொற்களில் மிகச் சிறப்பாக விளக்கினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
7ஆம் வகுப்பு – சிறீ சவுந்தர்யா – முதல் இடம்
6ஆம் வகுப்பு – எல். நந்தினி – இரண்டாம் இடம்
7ஆம் வகுப்பு – பி. ஏந்திழை – மூன்றாம் இடம்
வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி முதல்வர், முனைவர் க.வனிதா, பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார். இப்போட்டியைத் ரோபோட்டிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள் எஸ்.மகேஸ்வரி, ஆர்.பாக்கியலட்சுமி மற்றும் ஜி.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.
