நாத்திகராகுங்கள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாத்திகர்களாக மாறுங்கள்

அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் எல்லா மதங்களும், தங்களுக்கு எதிராக விமர் சனங்கள் வரும் போதும், கருத்துகள் வரும்போதும் கருத்துகளோடு மோதாமல் கருத்து சொன்னவர் களோடு தான் மோதி இருக்கின்றன!! 

மிரட்டி இருக்கின்றன!  அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து, கொலை செய்திருக்கின்றனர். 

இதுதான் வரலாறு, இந்த வரலாறுகளைதான் நாம் பார்த்து வருகிறோம்.

மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு உணர்ச்சிகளால் கட்டமைக்கப் பட்டவை.

அவற்றால் விவாதிக்கவோ, தங்களது கருத் துகள் தவறாக இருக்கும் பட்சத்தில், புதிய கருத் துகளை ஏற்றுக்கொள்ளவோ ,தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவோ முடியாது.

உலகம் தட்டை எனச் சொன்ன உங்கள் மதங்கள் உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது.

அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது. வங்காள தேசத் தில் முற்போக்கு எழுத்தாளர் களைக் கொன்றதும் சல்மான்ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் உங்கள் மதங்கள்தானே.!!

சமணர்களையும் பவுத்தர்களையும் கழுவேற் றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும்  மதங்கள்தானே.

ஆனால், நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனிதநேயத் துடனான அறிவியல் சிந்தனை.  அதனால் தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக் கொள்ளவும், தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் செய்கிறது.  மதங்கள்தான் மனிதனைக் கொன்றிருக்கின்றன. 

ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன் றதாக வரலாற்றின் எந்தப் பக்கங்களிலும் பதிவுகள் இல்லை.! இல்லை!!

சாக்ரடீஸ் முதல் புத்தன் வரை,  காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும், எழுத்திலும், செயலி லும், கடவுள் மறுப்பை விஞ்சிய மனிதநேயமே இருக்கிறது. 

நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளி களாகவும் இருந்து வருகிறார்கள். 

மதங்கள் கடவுளைப்பற்றியே  சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது,  நாத்திகம்தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

‘நாத்திகர்களாக’ ‘மாறுவதும்’ ‘வாழ்வதுமே’ ‘மிகச் சிறப்பு’.

‘குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர் களாகவாவது மாறுங்கள்’

(முகநூலிலிருந்து)

குடந்தை க.குருசாமி

தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *