நாகை, அக்.27– வானிலை மாற்றம் காரணமாக நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 26ஆம் தேதி நவம்பர் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த கப்பல் வாரத்தில் செவ்வாய்க் கிழமையைத் தவிர்த்து 6 நாட்கள் மட்டுமே சேவை நடைபெற்று வந்தது. தற்போது இருநாட்டு பயணிகளின் அதிக ரித்துள்ள தேவையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் வாரம் முழுவதும் கப்பல் சேவை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 14, 21ஆம் தேதிகளில் கூட சேவை நடைபெற்றது. இதற்கு பயணக் கட்டணமாக நாகையிலிருந்து இலங்கை சென்று வர ரூ.8,000 என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதில் நாகையிலிருந்து இலங்கை செல்ல ரூ.4,500, இலங்கையிலிருந்து நாகை திரும்ப ரூ.3,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் நேற்று (26ஆம் தேதி) முதல் வரும் டிசம்பர் மாதம் வரை நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவை
திரும்பப் பெறும் தமிழ்நாடு அரசுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
சென்னை அக.27– தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாலும் அண்மையில் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில், தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற் றப்பட்டது. இதனால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதையும், அடித்தட்டு உழைக்கும் மக்களின் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் என்பதை அரசின் கவனத்துக்கு எடுத் துக் கூறப்பட்டது. கல்வியாளர் கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல்கலைக் கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண் டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்த நிலையில், அதன் நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசு மசோதா வை திரும்பப் பெற்று, மறுபரி சீலனை செய்வது என முடிவு எடுத்துள்ளது. பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது மக்கள் மன்றத்திலிருந்து வந்த விமர்சனக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சட்ட மசோதாவை திரும்பப் பெறும் அரசின் முடிவை இந் திய கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
