தாய்லாந்து-கம்போடியா சண்டை நிறுத்த ஒப்பந்தம்! டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்

1 Min Read

கோலாலம்பூர், அக். 27– அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று (26.10.2025)மேற்கொள்ளப்பட்டது.

‘ஆசியான்’ கூட்ட மைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோ னேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு மற்றும் அதுசாா்ந்த பிற மாநாடுகள் மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் 26.10.2025 அன்று தொடங் கியது. அக். 30 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெ ரிக்க அதிபராக 2-ஆவது முறை பதவியேற்ற பின்னா், முதல்முறையாக ஆசியாவுக்கு டிரம்ப் பயணம் மேற் கொண்டுள்ளாா். இதன் ஒரு பகுதியாக 13-ஆவது ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்க அவா் 26.10.2025 அன்று கோலாலம்பூா் வந்தாா். அங்கு டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து -கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்ப மானது.

ஏற்கெனவே கடந்த ஜூலையில் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது விரிவான ஒப்பந்தம் கையொப்பமானது.

தாய்லாந்து-கம்போ டியா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது. எனினும் சண்டையை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்க தரப்பில் பொருளாதார அழுத்தம் அளிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தாக்கு தலைக் கைவிட்டன.

இந்நிலையில், விரி வான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி, தம்மிடம் உள்ள கம்போ டியாக் கைதிகளை தாய் லாந்து விடுவிக்கும். அதே வேளையில், ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் எல்லையில் இருந்து கனரக பீரங்கிகளை கம்போடியா திரும்பப் பெறும். சண்டை மீண்டும் தொடங்காமல் இருக்கும் வகையில், சூழல் தொடா்ந்து கண்காணிக் கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *