லண்டன், அக். 27– எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் போர் தொடங்கி 3½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தநிலையில் நிதி மற்றும் ராணுவ உதவி வேண்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று (26.10.2025) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் நடந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் வழங்க அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா அதிபர் புதின் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.
அங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும். டோமாஹேங்க்ஸ் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வைத்தார். இதனிடையே நேற்று (26.10.2025) உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
