மதுரை, அக். 27– மதுரை மாநகர், மதுரை புறநகர் இணைந்த கழக மாவட் டங்களின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று காலை 11 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் பெரி. பாக்கியலட்சுமி தலைமை ஏற்றார். அ.அல்லி ராணி வரவேற்புரை ஆற்றினார்.
முன்னிலை ராக்கு தங்கம் பொதுக்குழு உறுப்பினர், க.நாகராணி, தி.அஜிதா, கலைச்செல்வி, வே.சுசீலா, சி.ஜெயா, மாணிக்க வள்ளி மற்றும் வே.செல்வம் தலைமைச் செயற்குழு உறுப்பினர், அ.முருகானந்தம் மாவட்டத் தலைவர், இராலீ சுரேஷ் மாவட்டச் செயலாளர், வா.நேரு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர், த.ம.எரிமலை புறநகர் மாவட்டத் தலைவர், சுப. முருகானந்தம் மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், அ.வேங்கைமாறன் சொற்பொழிவாளர், இரா.திருப்பதி மாவட்ட துணை தலைவர், அழ.சிங்கராஜக் புறநகர் மாவட்ட துணை தலைவர், க.பெரியசாமி மேலூர் நகரச் செயலாளர், போட்டோ ராதா, பா.சதீஷ்குமார் புறநகர் மாணவர் கழக செயலாளர், நன்னன் பெரியார் பிஞ்சு, செல்லத்துரை பெரியார் பெருந் தொண்டர், சுரேஷ்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக வழி காட்டுதல் உரையை தகடூர் தமிழ்ச்செல்வி ஆற்றினார். புதிய பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோர்.
மதுரை மாநகர்
திராவிடர் கழக மகளிர் அணி
மாவட்டத் தலைவர் தி.அஜிதா
மாவட்ட செயலாளர் க.நாகராணி
திராவிட மகளிர் பாசறை
மாவட்ட தலைவர் அ.அல்லிராணி
மாவட்ட செயலாளர் மோ.புஸ்பலதா
