மறைமலைநகர், அக். 27– செங்கல்பட்டு மாவட்ட மறைமலைநகரில் பகுத்தறி வாளர் கழகம் சார்பாக கல்லூரி மாண வர்களுக்கு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகுத்தறிவாளக் கழக மாவட்டத் தலைவர் சே. சகாயராஜ் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் குழல் குமரன் வரவேற்பை வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இராதமிழ்ச்செல்வன் சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே 3000, 2000, 1000 ரொக்கமும், கேடயமும், புத்தகத்துடன் சான்றிதழும் பரிசாக பெற்றனர். இந்த போட்டியில் 17 மாணவர்கள் பங்கு பெற்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.
முதலிடம் – வெ.மெர்லின், சி.எஸ்.அய்.ஈ. வாட்ச் மகளிர் கல்லூரி மெல்ரோ சாபுரம், இரண்டாம் இடம் – அ.ஆதித்யா, எஸ்.ஆர்.எம். சட்டக் கல்லூரி காட்டாங் குளத்தூர், மூன்றாம் இடம் – கு.ஆகாஷ் குமார், அரசு கலைக் கல்லூரி செய்யூர்.
