திருத்துறைப்பூண்டி, அக் 27– திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் டவுன், பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் மருத்துவ குழுமம் ஹர்சமித்ரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருச்சி பெரியார் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களை திராவிடர் கழக மன்னார்குடி மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், பகுத்தறிவாளர் காஞ்சிபுரம் நா.கவிதம்பி, நகர மகளிரணி செயலாளர் சு.சித்ரா ஆகியோர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.
இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர் களுக்கு நம் மருத்துவ குழுமம் சார்பாக இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
